விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா

காரைக்குடி, அக்.6: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் 17ம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரவள்ளி வரவேற்றார். விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயக்குநர் உருமநாதன் முன்னிலை வகித்தார். கல்விகுழு செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்துச் செல்வது தான் கல்வியின் நோக்கம். வருங்கால தலைமுறையினருக்கு கல்வி கற்பிக்க கூடிய உன்னதமான பணியை மேற்கொள்ள இக்கல்லூரியில் நீங்கள் சேர்ந்துள்ளீர்கள்.

பாடப்புத்தகங்களை தாண்டி வாழ்க்கைக்கு தேவையான புத்தகங்களை படிக்க வேண்டும். நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை அதிகளவில் படிக்கும் போது தான் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிகமாக கற்றுக்கொண்டால் தான் உங்களிடம் கல்விகற்க உள்ள மாணவர்களுக்கு சிறப்பாக கற்றுத்தர முடியும். குறைகளை களைந்து நிறைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சசிகுமார், தமிழாசிரியர் மகாசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்