விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்வனத்துறையினர் விரட்டியடித்தனர்; குடியாத்தம், பேரணாம்பட்டில் பரபரப்பு

குடியாத்தம், டிச.25: குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் 3 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வனத்திற்குள் யானைகளை விரட்டியடித்தனர்.குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி, பரதராமி, கொட்ட மிட்டா, அனுப்பு, மோர்தனா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அவ்வாறு புகும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று குடியாத்தம் அடுத்த கே.வலசை கிராமத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 2 காட்டு யானை பிளிறும் சத்தத்துடன் புகுந்தது. தொடர்ந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை மிதித்து உடைத்து சேதப்படுத்தியது. இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பேரணாம்பட்டு:பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர் கொல்லை மேடு கிராமத்தை சேர்ந்த யோகானந்தன் என்பவர் சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிர் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை யோகனந்தன் நிலத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து, அங்கு அறுவடைக்கு தயாராக இருந்து வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தது. மேலும், தென்னை மரத்தையும் சேதப்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிலத்தின் உரிமையாளர் வனச்சரக அலுவலர் சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த வீரர்கள் யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்திற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, நேற்றும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்