விவசாயம் செழிக்க வேண்டி திருவிளக்கு பூஜை

தேவகோட்டை, ஜூலை 14: தேவகோட்டை கருதா ஊரணி நாகாத்தம்மன், புத்துமுனீஸ்வரர் ஆலயத்தில் 41ம் ஆண்டு பூச்செரிதல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பெண்கள், குழந்தைகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக நாகாத்தம்மன், புத்துமுனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சன்னதி முன்பு திருவிளக்கு ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெண்கள் 208 பேர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை தொடங்கியது. இந்த பூஜையில் கோடை காலம் முடிந்து பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். உலகை நன்மை, உலக ஒற்றுமை, குழந்தையின் கல்வி போன்ற வேண்டுதலுடன் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது