விவசாயத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தம் உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு சாத்தனூர் அணையில் இருந்து

தண்டராம்பட்டு, ஜூன் 9: சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்படும் என்று சாத்தனூர் அணை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பியதால் விவசாய பாசனத்திற்காக திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு, விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விவசாயத்திற்கு தொடர்ந்து 90 நாட்களுக்கு தென்பெண்ணையாறு வலது இடது புறம் கால்வாய் வழியாக சாத்தனூர் அணையில் இருந்து கடந்த மார்ச் 11ம் தேதி முதல் தொடர்ந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து இருந்தார்.

அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்.எ.வ. வேலு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோர் கடந்த மார்ச் 11ம் தேதி விவசாயம் பாசனத்திற்காக தொடர்ந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து வைத்தனர். இதனால் வலது இடது தென்பெண்ணை ஆற்று கரை ஓரத்தில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன்பெற்றது. ஏரியின் முழு கொள்ளளவு எட்டியது. நேற்று மாலை சாத்தனூர் அணை 103 அடியாக நீர்மட்டம் இருந்தது. இன்று காலை 8 மணி அளவில் விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும். இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீரை ஏரியின் முழுவதுமாக நிரப்பப்பட்டு உள்ளது. அந்த தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சாத்தனூர் அணை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி