விருதுநகர் ஜிஹெச்சில் 150 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை

விருதுநகர், மே 26: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் தனியார் நிறுவன அறக்கட்டளைகள் இணைந்து இலவச இருதய மருத்துவ முகாமினை நடத்தியது. கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார். முகாமில் விருதுநகர் சுகாதார பிரிவு மாவட்டத்தில் 60 குழந்தைகள், சிவகாசி சுகாதார பிரிவு மாவட்டத்தில் 90 குழந்தைகள் என 150 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

150 குழந்தைகளுக்கு இருதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் இருதய பரிசோதனையான எக்கோ ஸ்கேன் செய்து நோய்கள் குறித்து பரிசோதனை நடத்தினர். தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட உள்ளனர். அறுவை சிகிச்சை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர். முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி, துணை முதல்வர் அனிதா மோகன் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்