விருதுநகரில் கெட்டு போன 70 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

விருதுநகர், மே 26: விருதுநகரில் மீன் வளர்ச்சி துறையினர் வியாபாரிகளிடமிருந்து கெட்டு போன 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகில் மற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன் வளர்ச்சி துறை ஆய்வாளர் அம்சா காந்தி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது ஆய்வில் தரமற்ற கெட்டு போன மீன்கள் வியாபாரிகளிடம் இருந்ைது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீன் வளர்ச்சி துறையினர் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான கெட்டு போன 70 கிலோ எடையிலான மீன்களை பறிமுதல் செய்து பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் மூலம் அழித்தனர். மேலும் இனி கொட்டு போன மீன்களை விற்பனை செய்ய கூடாது என வியாபாரிகளிடம் எச்சரிக்கை விடுத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்