விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரைக்குடி, செப். 14: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் சார்பில் விநாயகர் சதுர்த்தி, வாரவிடுமுறை, முகூர்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் சார்பில் வரும் 16, 17ம் தேதி வாரவிடுமுறை, 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டும், 17ம் தேதி முகூர்த்த நாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும். சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய உர்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஆகிய ஊர்களுக்கும், கோயம்புத்தூரில், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களல் இருந்து திருச்சிக்கு. திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. 15, 16 ஆகிய நாட்களில் 300 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.

பயணிகள் மீண்டும் ஊர்களுக்கு திரும்ப செல்ல 18, 19 ஆகிய தேதிகளில் 100 சிறப்பு பஸ் இயக்கப்படும். பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்