விஜயதசமியை முன்னிட்டு செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் அட்மிஷன்

செங்கோட்டை,அக்.26: செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமி அட்மிஷன் நடைபெற்றது. விஜயதசமியன்று ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்காக ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளிக்கு வந்தனர். அட்மிஷன் எடுத்த மழலையர்களுக்கு வித்யாரம்பம் கல்வி கற்றல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களின் முதல் எழுத்தான ‘அ’ என்னும் எழுத்தை அரிசியில் எழுதினர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் பாடப் புத்தகங்களை மழலையர்களுக்கு வழங்கி வாழ்த்தினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு