விகேபுரம் மேலகொட்டாரம் வரசித்தி பேச்சி அம்மன் கோயில் கொடை விழா

விகேபுரம், ஏப்.17:விகேபுரம் மேல கொட்டாரத்தில் உள்ள வரசித்தி பேச்சியம்மன் கோயில் கொடை விழா கடந்த 9ம்தேதி கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை கொடி அழைப்பு, மாகாப்பு பூஜையுடன் விழா தொடங்கி நடந்தது. இதையொட்டி நேற்று காலை பாபநாசத்திலிருந்து பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, பால்குடம் எடுத்து வந்தனர். மதியம் ஒரு மணிக்கு அம்மனுக்கு அபிஷேக தீபாராதனை நடந்தது. மதியம் இசக்கி சுப்பையா எம்எல்ஏ சார்பில் அன்னதானம் நடந்தது.இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் தொடர்ந்து சாமக் கொடையும், படப்பு தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர் ராஜா, செயலாளர் பத்ரி நாராயணன், பொருளாளர் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு