விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

 

ஈரோடு,பிப்.16: விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகிய அமைப்புகள் ஈரோடு மத்திய அரிமா சங்கம் ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளையுடன் இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. முன்னதாக வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர்,

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் சிவா, செயலாளர் வெங்கட கணேஷ், பொருளாளர் முகமது ஹமீது, ஈரோடு மத்திய அரிமா சங்க அறக்கட்டளையின் தலைவர் தேவராஜ், செயலாளர்குமரவேல், முன்னாள் சங்கத் தலைவர்ஜெயஸ்ரீ தேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு அரிமா ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா இம்முகாமிற்கு மருத்துவ அலுவலராக செயல்பட்டார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் த.தினேஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மகாதேவி, முனைவர்முரளி, தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர்சுரேஷ், பொறுப்பாளர் ரோஹித் இம்முகாமின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்