திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

 

கோபி,பிப்.16: திருப்பூரில் நடைபெற உள்ள நீலகிரி மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பொதுக்கூட்டம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டத்தில் வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர்.செந்தில்நாதன் முன்னிலையில் கவுந்தப்பாடியில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சர் பிறந்தநாள் குறித்தும், திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் அறிவானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் வி.பி.சண்முகசுந்தரம், சென்னிமலை, புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சம்பத்குமார் மாதேஸ்வரன் காக்கி ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ்( பவானி தெற்கு), சேகர்( பவானி வடக்கு) சத்தியமூர்த்தி(பவானி தெற்கு), சிறுவலூர் முருகன்(கோபி தெற்கு),

கோரக்காட்டூர் ரவீந்திரன்( கோபி வடக்கு), செந்தில்குமார்(நம்பியூர்),இளங்கோ(சத்தி தெற்கு) தேவராஜ்(சத்தி வடக்கு)மகேந்திரன்(பவானிசாகர் வடக்கு),காளியப்பன்(பவானிசாகர் தெற்கு), நாகராஜ்(தாளவாடி கிழக்கு), நகர செயலாளர்கள் ப.சி.நாகராஜ்(பவானி) ஜானகிராமசாமி(சத்தி) பேரூர் கழக செயலாளர்கள் அன்பரசு ஆறுமுகம்(கொளப்பலூர்) வேலவன்(லக்கம்பட்டி) பழனிச்சாமி (சலங்கபாளையம்), குமாரசாமி ( பி.மேட்டுப்பாளையம்), ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவேங்கடம்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சுஜாதா ஜீவானந்தம்,இலக்கிய அணி அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்