வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு

நெல்லை, ஏப். 13: மக்களவை தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பழவூர், கூடங்குளம், சுத்தமல்லி உட்பட பல பகுதிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். நெல்லை மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணி, வாகன சோதனை உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இதேபோல் கொடி அணிவகுப்பு பேரணியும் நடத்தி வருகின்றனர். பாளை தாலுகா பகுதி, பழவூர், கூடங்குளம், சுத்தமல்லி போன்ற இடங்களில் முக்கிய வீதிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு