வாட்ஸ்அப் முடங்கியதால் மனமாற்றம் டெலிகிராம் செயலிக்கு 7 கோடி மக்கள் தாவல்

புதுடெல்லி: வாட்ஸ்அப் முடங்கியதால் 7 கோடி பயனர்கள் உடனடியாக டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தெரியவந்துள்ளது. உலகின் முக்கிய சமூகவலைதள செயலிகளாக உள்ள வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் திங்கட்கிழமை இரவு 9 மணி முதல் முடங்கியது. இதனால், உலகளவில் பயனாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மேலும், பேஸ்புக் நிறுவன தலைவரும் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தார். இந்த செயலிகள் மீண்டும் ஆன்லைனில் வருவதற்கு 7 மணி நேரம் பிடித்தது. இதனால் பயனாளர்கள் நிம்மதி அடைந்தாலும், விரக்தியடைந்த 7 கோடி பயனாளர்கள் டெலிகிராம் என்ற செயலிக்கு மாறி உள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து டெலிகிராம் செயலி நிறுவனர் பாவெல் துரோவ் கூறுகையில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பாராத வகையில் இருந்தது. டெலிகிராம் செயலி குறைபாடுகள் இன்றி செயல்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். 7 கோடி பயனாளர்கள் புதியதாக இணைந்துள்ளனர். இச்செயலியை மக்களிடம் அதிகமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்வோம். உலகம் முழுவதும் தற்போது 50 கோடி பயனர்கள் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர்,’’ என்றார்.வாடிக்கையாளரே முக்கியம்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது பேஸ்புக் பதிவில், ‘பேஸ்புக்  நிறுவனத்துக்கு லாபம் சரிந்திருக்கலாம். வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களுக்கு மாறியிருக்கலாம். வாடிக்கையாளர்கள் பாதுகாப்பே நமக்கு முக்கியம். லாபத்துக்காக சமரசம் என்ற குற்றச்சாட்டு சரியல்ல,’ என்று கூறியுள்ளார்….

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்தில் மோடி பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் பா.ஜ தோல்வி: நன்றி தெரிவித்து கிண்டல் செய்த சரத்பவார்

நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியதாக புகார்; ஜெகன்மோகன் வீட்டின் 3 அறைகள் இடித்து அகற்றம்: ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்த 11 பேரின் வீடுகள் இடிப்பு