வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி 100 சதவீதம் வாக்களிக்ககோரி அரியலூர் எஸ்பி நடவடிக்கையால் ஆன்லைனில் முதியவர் ஏமாந்த ₹16 லட்சம் மீட்பு

அரியலூர், ஏப்.14: அரியலூரில் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.16லட்சத்தை இழந்தவரிடம் அரியலூர் மாவட்டம், கீழப்பழூர், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், B1-3 சிகப்பி ஆச்சி நகரில் வசிக்கும் ரவிக்குமார் (54) என்பவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தில் வந்த எண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார். பின் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து அவர்கள் கொடுத்த அறிவுரைகள்படி, https://moodysec.com என்ற செயலியில் லாகின் செய்துள்ளார்.

பின் வெவ்வேறு வாட்ஸ்அப் எண்களிலிருந்து வந்த அறிவுரைகளின்படி மொத்தம் ரூ.16,00,000 பணத்தை முதலீடு செய்து இழந்துள்ளார். பின்பு இணைய குற்ற புகாருக்கான www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அளித்த புகாரின் பேரில், பிப்ரவரி 16 ம் தேதி அரியலூர் இணைய குற்ற காவல் நிலைய மனு எண் 42/2024 ன் படி பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சஞ்சய்குமார், கூடுதல் காவல தலைமை இயக்குநர், இணைய குற்ற பிரிவு அறிவுறுத்தலின்படியும், கார்த்திகேயன், திருச்சி மண்டல காவல் துறை தலைவர் மற்றும் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் மனோகர், ஆகியோர்களின் அறிவுரைப்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் படியும், அசோக்குமார், காவல் கண்காணிப்பாளர், இணைய குற்ற பிரிவு-III, ஆலோசனையின்படியும், அந்தோணி ஆரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இணைய குற்ற பிரிவு, வழிகாட்டுதலின்படியும், இணையக்குற்ற காவல நிலைய காவல் ஆய்வாளர் கார்த்திகேயனி இப்புகார் தொடர்பாக விசாரணை செய்தனர்.

இதில் குற்ற செயலுக்காக பயன்படுத்திய மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தியன் வங்கி கணக்கு, ஒடிசாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கு, ராஜஸ்தானில் உள்ள AU Small Finance வங்கி கணக்கு ஆகிய வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. பின் இணையக்குற்ற காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் மனுதாரர் இழந்த பணம் ரூ. 16,00,000 மீடக்கப்பட்டு மீண்டும் அவருடைய AXIS வங்கி கணக்கில் திரும்ப பெற்று தரப்பட்டுள்ளது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை