வாகன ஓட்டிகள் கோரிக்கை திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் கோடி அர்ச்சனை மகாபிஷேகம்

கும்பகோணம், ஏப்.2: கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் சரபேஸ்வரருக்கு கோடி அர்ச்சனை மகாபிஷேகம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனத்தில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் கம்பகரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உருத்திரபாத திருநாள் உற்சவத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. கடந்த 21ம் தேதி திருக்கல்யாண வைபவம், 23ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் கோடி அர்ச்சனை நேற்று நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் ஆகியோர் முன்னிலையில் நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தருமபுரம் வேத பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மந்திரங்கள் ஓத உற்சவர் சரபேஸ்வரருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை, மூலவர் சரபேஸ்வரருக்கு காலை முதல் தொடர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் ஆலோசனையின் பேரில் காசாளர் கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு