வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 

திருச்சி, ஜன.14: தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடந்த ஜன.11 முதல் 17ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. திருச்சி சுப்ரமணியபுரம் மற்றும் மன்னார்புரம் பகுதியில் நேற்றுமுன்தினம் தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் சேதுபதி தலைமையில் ஊழியர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து உதவி கோட்ட பொறியாளர்கள் ரவிக்குமார், எழில்ரவி, உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து அந்த வழியாக கடந்து சென்ற வாகனங்களின் பின்பகுதியில் ஔிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர்களை ஒட்டியும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது