வலங்கைமான் பகுதியில் மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

 

லங்கைமான், மார்ச் 17: வலங்கைமான் பகுதியில் சுள்ளன் ஆற்றில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி தலைமையில் வலங்கைமான் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேகமாக வந்த லோடு வேனை வலங்கைமான் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சுள்ளன் ஆற்றில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லோடு வேனை பறிமுதல் செய்த காவல்துறையினர் லோடு வேனின் ஓட்டுனரான பாரதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் சோழன் (27) என்பவரை கைது செய்தனர்.மேலும் தலைமறைவான வேனின் உரிமையாளரான பாதிரிபுரம் தமிழ்மாறனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது