வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?

 

வருசநாடு, ஏப். 26: வருசநாடு அருகே வைகை நகர் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பெண்கள் கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை, மூலக்கடை உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன. இதில் சில ஊராட்சிகளில் பெண்கள் கழிவறைகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இதனால் அவற்றை பயன்படுத்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதியை சேர்ந்த பெண்கள் நலன் கருதி சேதமடைந்த நிலையில் உள்ள கழிவறைகளை சீரமைக்க அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றிய ஊராட்சிகளில் கழிவறைகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இதனால் அவை சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்