வரத்து குறைவால் வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டில், வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் விற்பனையின் போது, சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி தென்காசி, நெல்லை,தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வாரந்தோறும் வாழைத்தார் வரத்தை பொறுத்து, ஏலத்தில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் கோடை மழையையொட்டி, புதிதாக வாழை நடவு பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால்,கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெளியூர் பகுதியிருந்தே வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தது. இருப்பினும், கடந்த வாரம் வரை முகூர்த்த நாட்கள் அவ்வப்போது இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானது.இதில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து குறைவான வாழைத்தார்களே வரபெற்றது.வாழைத்தார் வரத்து குறைவால், இந்த வாரத்திலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாழை ஒரு கிலோ ரூ.48 வரையிலும், பூவந்தார் ஒரு கிலோ ரூ.35 க்கும், மோரீஸ்ரூ.20க்கும், கேரள ரஸ்தாளி ரூ.48க்கும்,நேந்திரன் ஒரு கிலோ ரூ.55க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்….

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி