எடப்பாடி தரப்பு சர்வாதிகாரப் போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டு வர முயற்சிக்கிறது : அதிமுக ஒருங்கிணைப்பாளர் காட்டம்

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை படித்து விளக்கம் அளித்தனர். பின்னர் பேசிய வைத்திலிங்கம், ‘அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வலியுறுத்தி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது; 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர்; 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். அதிமுக சட்ட விதிகளின்படி ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த தனித்தீர்மானம் கொண்டு வர முடியாது.தொண்டர்கள் தேர்வு செய்த ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் 5 ஆண்டு பதவி வகிப்பார். அதை மாற்ற முடியாது.தம்பிதுரை, செங்கோட்டையன் ஆகியோர் ஓ பன்னீர் செல்வத்திடம் ஒற்றைத் தலைமை குறித்து பேசவில்லை .எடப்பாடி தரப்பு சர்வாதிகாரப் போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டு வர முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் தரப்பின் எண்ணமாக உள்ளது. ஆனால் கட்சியைப் பற்றி  கவலைப்படாமல் ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி தரப்பு முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழுவை ஒத்திவைக்க வலியுறுத்துகிறோம், ‘என்றார். …

Related posts

சொல்லிட்டாங்க…

தமிழ் உள்ளவரை கலைஞர் சாதனைகள் நிலைத்திருக்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்