வடமாநில வாலிபர்கள் 2 பேர் அதிரடி கைது

பரமத்தி வேலூர், மார்ச் 9:பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு டீக்கடை அருகே, சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்த போது, அதில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த கரீப்ராம் மகன் ஸ்ரீராம் (26), ராஜஸ்தான் மாநிலம், டேடுனுடா பகுதியைச் சேர்ந்த சங்கர்லால் மகன் ராம் அவ்தார்(34) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பரமத்திவேலுார் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளிகளுக்கு, குட்கா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது