வடசேரியில் பைக்கில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், செப். 21 : அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமார், வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர், ஜீப் டிரைவர் டினு ஆகியோர் வடசேரி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். அதிகாரிகளை பார்த்த அவர் இருச்சக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு தப்பிச்சென்றார். இதையடுத்து அதிகாரிகள் இருச்சக்கர வாகனத்தை விரட்டிச்சென்றனர். அருகுவிளை பகுதியில் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாகனத்தில் வந்தவர் தப்பிச்சென்றார். அதிகாரிகள் இருச்சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது கொரியர் பையில் சுமார் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து கோணம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்