வடக்கு குறுமைய மாணவியர் கால்பந்து ஜெய்வாபாய் பள்ளி இறுதி போட்டிக்கு தகுதி

 

திருப்பூர், ஆக.29: வடக்கு குறுமைய மாணவியர் கால்பந்து 17 வயது பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. திருப்பூர் மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் வடக்கு குறுமைய அளவிலான மாணவியர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சங்கர் போட்டிகளை துவக்கி வைத்தார். வடக்கு குறுமைய கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், குறு மை இணைச்செயலாளர் இயேசுராஜா, கலையரசன் ஆகியோர் போட்டிகளை முன்னின்று நடத்தினர்.

14 வயது வயதுக்குட்பட்டோர் மாணவியர் பிரிவில் 6 அணிகள் பங்கேற்றதில், இன்பன்ட் மெட்ரிக் பள்ளியும், ஏவிபி மெட்ரிக் பள்ளி அணியும் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நான்கு அணிகள் பங்கேற்றதில் இன்பன்ட் பள்ளி அணியும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. இதேபோல் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், நான்கு அணிகள் பங்கேற்றதில் ஏவிபி பள்ளி அணியும், மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணியும் தகுதி பெற்றன. இறுதிபோட்டிகள் 30ம் தேதி மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்