லால்குடியில் கோதண்டராமர் ஆலய ஏகதின ப்ரம்மோத்ஸவம்

 

லால்குடி, மார்ச் 19: கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் தனியார் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலய ஏகதின ப்ரம்மோஸ்தவம் நடைபெற்றது.
டால்மியா சிமெண்ட் ஆலை செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி திருவீதி உலா வாகனத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டால்மியா சிமெண்ட் ஆலை துணை செயல் இயக்குனர் கணபதிராமன், டால்மியா சிமெண்ட் உயர் அதிகாரிகள் சுப்பையா, சுரேஷ், நாச்சியப்பன், பிரகாஷ், துரைராஜ், ரமேஷ்பாபு, சண்முகம், கல்யாண் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சூரியபிரபை, சேஷ, இந்திரா, ஹனுமந்த, கஜ, சிம்பு, அஸ்வ, சந்திரபிரபை, கருட வாகனங்களில் கோதண்டராமர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் டால்மியா சிமெண்ட் ஆலை கோதண்டராமர் ஆலய குழுவினர் செய்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி