லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

சேலம், நவ.29: திருப்பத்தூர் மாவட்டம், ஜம்மாபுதூர் அருகேயுள்ள தம்மனூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் சுரேஷ் (28), லாரி டிரைவர். இவர் டாரஸ் லாரியில், நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு கோவைக்கு புறப்பட்டார். இரவு 7.30 மணியளவில் அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், இடிபாடுகளுக்குள் டிரைவர் சுரேஷ் சிக்கிக்கொண்டார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில், வீராணம் போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் டிரைவர் சுரேசை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்