லாரியில் கடத்தி வந்த 17 மூட்டை குட்கா பறிமுதல்

சேலம், ஏப்.28: சேலம் லீபஜார் அருகே ரவி என்பவரது குடோனுக்கு, குட்கா மற்றும் போதை பொருட்களை லாரியில் கொண்டு வந்துள்ளதாக, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு நின்ற லாரியில் சோதனை செய்த போது, 17மூட்டைகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் இருப்பதும், பெங்களூருவில் இருந்து அதிகாலை அவை கொண்டு வரப்பட்டதும், சிலவற்றை வியாபாரிகள் வாங்கி சென்றதும் தெரியவந்தது. ஆனால், அந்த குடோனில் ரவி இல்லை. இவர் மீது ஏற்கனவே குட்கா கடத்தல் வழக்கு உள்ளது. இதையடுத்து லாரியுடன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்