ரேஷன் குறைதீர் முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், பொது வினியோகத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம், இன்று (8ம்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில், வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், செல்போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு கோருதல் மற்றும் பொது விநியோக ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து குறைகள் இருந்தால், அவற்றை தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்