ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி

 

ராமேஸ்வரம், மே 5: ராமேஸ்வரத்தில் 25 பொது இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் சுற்றுலாத்தளம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் துவங்கியுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளில் முக்கியமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 25 பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அக்னி தீர்த்தத்தில் துவங்கி பேருந்து நிலையம் வரை கூரைப்பந்தல் அமைத்து வெயிலின் வெப்பம் அடையாமல் வைக்கப்பட்டுள்ள இந்தக் சுத்திகரிப்பு குடிநீரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி செல்கின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்