ராமநாதபுரம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

சிவகிரி: ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நாடார் உறவின் முறை தலைவர் ஜோதி ராஜன் தலைமை வகித்தார். பள்ளி கமிட்டி தலைவர் மாரியப்பன், மாடசாமி, மருதக்கனி, பிரபாகர், காளியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் உள்ளிட்டோர் 265 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி, கிளைச்செயலாளர் மகேந்திரன், மணிகண்டன், ராமராஜ், கணேசன், காசி ராஜன் மற்றும் வக்கீல் பொன்முத்து வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்