ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

நகாவுர்: ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழாங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயம் அடைந்த 7 பேரும் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து பற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்தார். …

Related posts

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை எடியூரப்பாவுக்கு பிடிவாரன்ட்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

சிபிஐ விசாரணைக்கு தயாரில்லை எனில் நீட் தேர்வு முறைகேடு பற்றி உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்