மொபட் மீது பள்ளி வேன் மோதி முதியவர் பலி

சாத்தான்குளம்,பிப்.10: சாத்தான்குளம் அருகே உள்ள நார்த்தன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (75). விவசாயியான இவர் மாடுகளும் வளர்த்து வந்தார். நேற்று பண்ணையில் பால் ஊற்றி விட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நார்த்தன்குறிச்சி விலக்கில் திரும்பிய போது பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் திடீரென அவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஹரி கிருஷ்ணன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் தச்சமொழியை சேர்ந்த விஜயகுமார் (54) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு