கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில்

ஆரணி, பிப்.10: போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமாலை மாவட்டம், போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் பழமையான கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயில், ஒவ்வொரு ஆண்டும் தை அமாவசை அன்று தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தை அமாவாசையான நேற்று கூத்தாண்டவர் கோயில் தேர் திரவிழா நேற்று நடந்தது. அப்போது, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, தேரில் அலங்கரிக்கப்பட்ட கூத்தாண்வர் மற்றும் செல்லியம்மன், விநாயகர் சுவாமிகள் தனித்தனி தேரில் அமர வைத்து, பெலாசூர் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் இருந்து முக்கிய விதிகள் வழியாக தேர் ஊர்வலமாக தேரோட்டம் நடந்தது. இதில், பெலாசூர் சுற்றுவட்டரா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு வாணவேடிக்கை, நாடகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது