மொகரம் கொடியேற்று விழா

உத்தமபாளையம், ஜூலை 30: உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் ரசூல் சாஹிப் தர்கா உள்ளது. நேற்று நடந்த மொகரம் 10ம் நாளில் ரசூல் சாஹிப் தர்காவில், மௌலீது சரிப் ஓதப்பட்டது. இதில் இமாம்கள் இஸ்மாயில், ரிஷ்வான் கலந்து கொண்டு, மவ்லீது ஓதி கூட்டு பிரார்த்தையில் ஈடுபட்டனர்.நிகழ்வில் ரசூல் சாஹிப் தர்கா பரம்பரை முத்தவல்லி மைதீன் ஷா சையது அப்தாகீர் தலைமையில் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகரம் சிறப்பு பிரார்த்தனையாக உலகமக்கள் நலன் வேண்டி பிரார்த்திக்கப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்