மேலூரில் சாலை விபத்து: கணவர் கண் முன்னே மனைவி பரிதாப சாவு

மேலூர், ஜூன் 6: மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று நடந்த டூவீலர் விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பரிதாபமாக பலியானார். மதுரை, பழங்காநத்தம் நேரு நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(32). மேலூரில் இவரது உறவினர் வீட்டு விஷேசம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கான தனது மனைவி மீனாட்சி(27)யுடன், டூவீலரில் மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். வழியில் தெற்குதெரு இணைப்பு சாலை அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர்களது டூவீலர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் மற்றும் மீனாட்சி ரோட்டோரத்தில் விழுந்தனர். இதில் தலையில் அடிபட்டு கணவர் பாலமுருகன் கண்முன்னே மனைவி மீனாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து மேலூர் எஸ்ஐ பழனியப்பன் வழக்கு பதிவு செய்து டூவீலர் மீது மோதிய வாகனம் குறித்து தீவிர விசாரணை ணநடத்தி வருகிறார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை