புதிய பயணியர் நிழற்குடை: வெங்கடேசன் எம்.பி திறப்பு

மேலூர், ஜூன் 6: கொட்டாம்பட்டி அருகே தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள செட்டியார்பட்டியில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மதுரை தொகுதியின் எம்.பி வெங்கடேசன் பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.இந்நிகழ்ச்சியில், மார்க்.,கம்யூனிஸ்ட் மாநில குழு நிர்வாகி பாலா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், நகர் செயலாளர் மணவாளன், நிர்வாகிகள் ராஜாமணி, தனசேகரன், அடக்கி வீரணன், ஆனந்த், மணி, ராஜேஸ்வரன், அடைக்கன், முத்துலட்சுமி மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு