மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2வது நாளாக மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர், மார்ச் 29: மேட்டூர் அனல்மின் நிலையத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று 2வது நாளாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது. அதே போல், 2வது அலகில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம், 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரண்டாவது பிரிவில், கொதிகலனில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. குழாய் வெடிப்பு காரணமாக, 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதையடுத்து, கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில், பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்றும் தொடர்ந்து பணி நடைபெற்றது. இதனால், 2வது நாளாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்