மூலனூர் பாரதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா

தாராபுரம்,ஏப்.2: தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலையர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் அரிமா பி.எஸ்.செல்லமுத்து தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் எஸ்.பழனிசாமி வரவேற்றார். மறைமுக வரித்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் சி.ஈஸ்வரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்தது கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு