முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சேந்தமங்கலம், மார்ச் 27: எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிபட்டி ஊராட்சி கந்தபுரி பாலதண்டாயுதபாணி கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கிருத்திகை சங்க மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கந்தபுரி மலையை பற்றி வந்து, முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை கந்தபுரி அடிவாரத்தில் முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் எருமப்பட்டி, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி