முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு

நாமக்கல், பிப்.22: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு, கலெக்டர் உமா தலைமையில் இன்று மதியம் 12 மணியளவில், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. அதில் தொழில்பயிற்சி, இந்தியன் வங்கி, பொது மேலாளர், மாவட்ட தொழில்மைய மாவட்ட மேலாளர், தாட்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் / பயிற்சிகள் குறித்து விளக்குகின்றனர். எனவே, முன்னாள் படைவீரர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள், படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கான சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டத்தில், தங்களது குறைகளை மனுக்களாக எழுதி (2-பிரதிகள்) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்