முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம், ஏப்.23: ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து கணபதி, முனீஸ்வரர், கருப்பணசாமி கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.  முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் உள்ளூர் பக்தர்கள் ஆன்மீக பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்