முதல்வர் பிறந்தநாளை கொண்டாட காங்கயம் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 

காங்கயம், பிப்.28: காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார். இதில் ஓ.எம்.ஆர் பூர்த்தி செய்து விரைவாக வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 1ம் தேதி முதலமைச்சரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் – திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது எனவும், வாக்காளர்களை குடும்ப வாரியாக கண்டறியும் பணிகளை விரைந்து முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு