மின்கம்பி மீது உரசி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரி

ராசிபுரம், மார்ச் 22: திருவாரூர் அடுத்த வைப்பூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ராஜ்குமார் (29). இவர், ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் கரடியானூர் பகுதிக்கு, வைக்கோல் ஏற்றிய லாரியை ஓட்டி வந்தார். அப்போது லாரியில் இருந்த வைக்கோல், மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசாமி தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் லாரி மற்றும் அதில் இருந்த வைக்கோல் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி