மாவா, கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் மாவா விற்பனை நடப்பதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் காலை வியாசர்பாடி கல்லுக்கடை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் சிறுசிறு பொட்டலங்களாக மாவா வைத்திருந்தார். பிறகு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வியாசர்பாடி சாமியார் தோட்டம் 3வது தெருவை சேர்ந்த உமாபதி (45) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. * திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருவிக நகர் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருவிக நகர் பல்லவன் சாலையில் உள்ள காலி மைதானத்தில் திருவிக நகர் போலீசார் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் திருவிக நகர் இளங்கோவன் தெருவை சேர்ந்த சரவணன் (39), கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து சிறுசிறு பொட்டலங்களாக ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சரவணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்