மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்

 

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.17: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நமது ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் முஹம்மது அஸ்ஃபாக் அரசு பள்ளி சார்பாக கலந்து கொண்டார். இவர் முதல் பரிசினை பெற்று கேடயம் மற்றும் ரூ.3000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் இந்த ஆண்டே ஏற்கனவே ஒரு முறை முதல் பரிசு பெற்றுள்ள நிலையில் இரண்டாவது முறையாக முதல் பரிசினை பெற்றார். முதல் பரிசு பெற்ற மாணவனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜு ,ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை