மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம்

நாமக்கல், பிப்.14: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி), இணைந்து நடத்தும், கல்வி கடன் முகாம், அனைத்து வங்கிகளின் சார்பில் வரும் 15ம்தேதி காலை 9 மணியளவில், பாச்சல் ஞானமணி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே நாமக்கல் பாவை கல்லூரி, ஞானமணி கல்லூரி, திருசெங்கோடு விவேகானந்தர் கல்லூரி,

கேஎஸ்ஆர் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு, ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்படும்.
மேலும், முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.com என்ற இனையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.பான்கார்டு இல்லாத மாணவர்கள், ஆதார் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் எடுத்து வந்தால் முகாம் நடைபெறும் இடத்திலேயே இ-சேவை மையம் மூலமாக பான்கார்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும், இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்விக்கடன் அனுமதி வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேம்பாலத்தில் உறுதிதன்மை பரிசோதனை

அரசு மாதிரி பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்