மால்புவா

செய்ய தேவையான பொருட்கள்:-    1 கப் மைதா 1 கப் கோதுமை மாவு 1 கப் ரவை 1/2 கப் துருவிய பன்னீர் 1 கப் சர்க்கரை 1 கப் தண்ணீர் நெய் – தேவையான அளவு 1/2 தேக்கரண்டி  உலர்பருப்புகள் 1 டீக்கரண்டி பெருஞ்சீரகம் 1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்  செய்முறை : முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இவற்றை நூல் தன்மை அடையும் வரை பாகு காய்ச்ச வேண்டும். பின்பு ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். பின்பு அதில் சக்கரைப் பாகினை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். குறிப்பாக கலவையானது கட்டிப்படாமல் இருக்க வேண்டும். இந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். இவை வறண்டு காணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை 3-4 மணிநேரம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றிக் கொண்டு, அதன் மீது கலந்து வைத்துள்ள மாவை பரப்பி ஊற்றவும். மாவானது ஒருபக்கம் வெந்தவுடன் மறுப்பக்கம் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.. …

Related posts

பாயச அன்னம்

மகாதேவனின் பிரசாதங்கள்

விதவிதமான பிரசாதங்கள்!