மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர்,டிச.16: அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் மாற்றுத்திறனாளிகளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்திர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் 72 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கையின் மீது மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மூலம் பகிர்ந்து அளிக்கப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இக்குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி மற்றும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் ரூ.45,150 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுலவர் சீனிவாசன், முடநீக்கு வல்லுநர் ஜெயராமன், தாசில்தார்கள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்