மாயனூர் ரயில்வே கேட் அருகே வாகனங்கள் முண்டியடித்து செல்வதால் விபத்து அபாயம்

 

கரூர், மார்ச் 15: இன்று உலகம் முழுவதும் எல்லோரும் பொறுமை என்பது இருப்பதில்லை. வாகனத்தை எடுத்தவுடன் உடனடியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படியாவது முண்டியடித்தாவது செல்ல வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் விருப்பமாக இருக்கிறது. இது நியாயமான ஒன்றுதான். இருப்பினும் முண்டியடித்தால் போதுமான இடவசதி இருந்தால் வாகனங்களை ஒதுக்குவதற்கு வசதியாக இருந்தால் தாங்கள் நினைத்தபடி செல்ல முடியும்.

மாறாக கூடுதலான ரயில்வே கேட் போடப்பட்டுள்ள நேரங்களில் கூட வாகன ஓட்டிகள் பொறுமை காணாமல் எதிர் எதிர் திசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி எல்லோரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது . வாகன ஓட்டிகள் முறையாக போக்குவரத்து வாகன விதிகளை நடைமுறைப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விபத்து இல்லாமல் பயணிக்க முடியும். இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது அனைவரும் விருப்பமாகும். மேலும் மாயனூர் ரயில்வே கேட் அருகே வாகனங்கள் முண்டியடித்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை