மானாமதுரையில் தெரசாள் ஆலய தேர் பவனி திட்டமிட்டபடி நடக்கும் சமரச கூட்டத்தில் முடிவு

மானாமதுரை, செப்.28: மானாமதுரை புனித குழந்தைகள் தெரசாள் கோயில் திருவிழா செப்.22ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிறப்பம்சமாக புனித குழந்தை சொருபம் தாங்கிய தெரசாள் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினர் காவல்துறையில் புகார் செய்திருந்தனர்.

இதன் காரணமாக மானாமதுரை வட்டாட்சியர் ராஜா தலைமையில் காவல்துறை ஆய்வாளர் முத்துகணேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் பங்கு பேரவை துணைத்தலைவர் இருதயராஜ், செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் மரியசெபஸ்தியார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியராஜ், காசிராஜன் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தெரசாள் ரதம் நகரை சுற்றி கோயிலை வந்தடையும் என்று இக்கூட்டத்தில் முடிவானது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்