மானாமதுரையில் இருந்து அயோத்திக்கு சென்ற சிறப்பு ரயில்

மானாமதுரை,பிப்.16: மானாமதுரையில் இருந்து அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர்கோயிலுக்கு இந்தியா முழுவதும் ரயில்வே சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 380 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு 23 ரயில்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மானாமதுரையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில் முதல் முறையாக இயக்கப்படும் என்றும் கட்டணமாக ரூ.3100 என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த ரயிலில் இரண்டு பெட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 152 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். மற்ற பெட்டிகள் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.இதற்கான வழியனுப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை கோட்ட அதிகாரிகள் செய்திருந்தனர். முதல் நடைமேடையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டு பயணிகளின் உடைமைகள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்னிலையில் மோப்ப நாய்கள்,

மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டு பயணிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.பின்னர் அவர்களுக்கு மதுரை கோட்ட ேமலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் ஐஆர்சிடிசி அதிகாரிகள் பயணிகளுக்கு இனிப்புகள் உணவுகள் வழங்கினர். ஒவ்வொரு பெட்டிகளுக்கும் தனி அலுவலர்கள் ஒதுக்கப்பட்டு பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. சிறப்பு ரயில் கிளம்பும்போது பாஜக சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது